என் இடம் மாறினால் எண்ணமெல்லாம் மாறும் என,
அன்று புவனா என்றென்றும் வால் பகுதியா நான்?
இன்று அமுதா இங்க மட்டும் என்ன வாழுதாம் !
தேவை தான் அண்ட வெளியாய் , தட்டச்சுப் பலகையில் நீண்டதாய்
கோலம் என்றால் அழகு தங்கள் யாருக்கும் அந்த அவப்பெயர் இல்லையே :
நாய் குடையழகே உன்னில் நான் பாதி ஸீ யைக்கேள் எனது வலிமையை;
குறிப்பா சொல்லனும்னா வாங்க இங்கே இருக்கோமுள்ள 'நாங்க'
நோட் பண்ணுங்கப்பா " கோட் பண்ணுங்கப்பா"
தயக்கத்தை சொல்ல மட்டும் தான் ...
திறக்கும் போதோ அழுகின்றார் :(
மூடும் போதோ சிரிக்கின்றார் :)
நிறுத்'தற்க்குறிகளுக்கு" நிதானம் வேண்டும்,
நயவஞ்சகம் நயாமாகுமா? நியாயமாகுமோ?
சிந்திப்பீர் சற்றே!
ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லுங்கள்;
சொல்வது ஒன்றும் புரியவில்லை
...இல்லை :இனி பேசி பிரயோசனம் இல்லை.
moral: பங்சுவேஷன் பேசினால் பாழாகும் பொயட்ரி