Thursday, June 2, 2011

கிச்சா மாமா - 1

வழக்கம் போல நேத்திக்கு எங்க மாமாவுக்கு ஃபோன் செஞ்சேன்.அப்போன்னு பாத்து அவரோட லேண்ட்லைன் ஃபோனுக்கு எதோ கால் வந்தது.

மாமா: "ஒரு நிமிஷம் லைன்லயே இருடா, யாருன்னு பாக்கறேன்"

சரி அவர டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு அவர் பேசறத மட்டும் ஒட்டு கேட்டேன்.

"அடடே நீங்களா? சொல்லுங்கோ"

"எக்மோர் வந்தாச்சா? கண்டிப்பா இப்பவே கெளம்பி வரேன்"

"இல்ல இல்ல, எதுவும் வெளில சாப்ட வேண்டாம், இங்கே எல்லாம் இருக்கு, சமயல் வட பாயசத்தோட பன்னிட்டா இவ"

"வேண்டாம் வேண்டாம். ஃபரெண்டுக்கெல்லாம் அப்பறமா இங்க வந்து சேர்ந்துட்டு சாவகாசமா பேசிக்கலாம், தோ வந்துட்டேன்"

ஃபோன் வெச்ச சத்தம் கேட்டது.


"ஹூம் சொல்லுடா என்ன பண்ற? அங்க ராத்திரியா?"


"சும்மா தான் பன்னேன், யாரு மாமா ஃபோன்ல?"


"பாவம்டா யாரோ சேஷாத்ரியாம், சந்தானம் இருக்காரான்னு கேட்டார், யர்லி மார்னிங்க் டிசப்பாய்ண்ட் பன்ன வேண்டாமேன்னு கொஞ்சம் பேசிண்டிருந்தேன், ராங்க் நம்பர்னு வெச்சிக்கோயேன்"

அதிர்ந்த்து போய் நானும் ஃபோன வெச்சிட்டேன்.



17 comments:

krishnamoorthy said...

kumar eppa kichaa aanaar?

பாரதசாரி said...

kumar = sri krishna sarma

bandhu said...

உங்க நண்பர் வெள்ளை சாமியே பரவாயில்ல போல இருக்கு. அவர் என்னடான்னா வேண்டாத ஆளா பார்த்து கடுப்பேத்தறார். உங்க மாமாவோ எல்லாரையும்! உங்க கிட்ட தான் ஏதோ பிரச்சனையை இருக்கு :-) உங்களுக்கு வேண்டியவங்க யாராவது போன்ல கடுப்பேத்தரதுலையே இருக்காங்க!

பாரதசாரி said...

அன்புத் தொழர் பந்து சரியாச் சொன்னீங்க:-)
வெள்ளைச்சாமி அவுட் கோயிங்க் , இவரு
இன் கமிங்க் ;-). ஆனா ரெண்டு பேரும் வெறுப்பேத்தறதுல கில்லாடிங்க :)
வருகைக்கு மிக்க நன்றி

Avargal Unmaigal said...

நல்ல நகைச்சுவை...பதிவுக்கான படமும் நன்று

G.M Balasubramaniam said...

திரு. பாரதசாரி அவர்களே, உங்கள் நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி இருக்கிறது. அதென்ன பாரதசாரி.? அதுதான் உங்கள் உண்மைப் பெயரா.?ஏதோ தெரியாமல் சும்மா தமாஷுக்கு எழுதி விட்டேன் இதிலும் சொற்குற்றம் பொருட்குற்றம் கண்டு விடாதீர்கள். அடிக்கடி என் வலைப்பூவுக்கு வாருங்களேன் வாழ்த்துக்கள். ்

பாரதசாரி said...

G.M Balasubramaniam அவர்களே வணக்கம்.
ஒட்டு மொத்த பாரதத்திடமும் மன்னிப்பு கேட்கும் விதமாக இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன்:-) வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

Vikis Kitchen said...

Enna kodumai sir ithu:)Vadivelu should see this post ....so funny!

பாரதசாரி said...

// Viki's Kitchen// மிக்க நன்றி. வடிவேல் எங்க இருக்கார்னு கூகுல் ல தேடித்தான் பாக்கனும் ;-)

kashyapan said...

பாரதசாரி அவர்களே! உமக்கு மட்டும் சொல்கிறென்.நேற்று 12.6.2011 என்னுடையதிருமண ஐம்பதாம் ஆண்டு . அமைதியாக நானும் என் மனைவியும் இருந்தோம்.முந்தின இரவு என் மகன் வந்து புடவை குர்த்தா கொடுத்துவிட்டுப் போனான். என்மைதுனர்கள் மறுநாள் புடவை மற்றவைகளை கொடுத்தார்கள். வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

பாரதசாரி said...

அன்புள்ள காசியபன் அவர்களே,
மிக்க மகிழ்ச்சி உங்கள் செய்தியை கண்டு :-)
தொடர்ந்து பல குர்த்தாக்களும் புடைவைகளும் ஒவ்வோராண்டும் வந்து குவியும் என்று நம்புகிறேன்.

பாரதசாரி said...

காஷ்யபன் ஐயா //அமைதியாக நானும் என் மனைவியும் இருந்தோம்// நல்ல நகைச்சசுவை உணர்வு மகவும் ரசித்தேன் ;-)

மோகன்ஜி said...

மென்மையான உங்கள் நகைச்சுவை உணர்வு இதமாய் இருக்கிறது . நிறைய எழுதுங்கள் நண்பரே!

பாரதசாரி said...

Many thanks மோகன்ஜி for visting and for your encouraging comments!

கார்த்திகா said...

simply nice :)

பாரதசாரி said...

கார்த்திகா, Many Thanks !! and please visit often!

bandhu said...

எனது ப்ளாகில் இருந்த Follower பிரச்சனையை சரி செய்துவிட்டேன்..

Post a Comment