Thursday, August 26, 2010

சைட் டிஷ் - 1. மாண்புமிகு மாணவன் "செல்வா"விற்கு மரியாதை

நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக நெருக்கமென்று பார்த்தால் நினைவுக்கு வருபவர்கள் தான் ஊறுகாய்கள் என்று அன்போடு அழைக்கப்படும் அப்பாவி ஜீவராசிகள்.இவர்களுக்கு "சைட் டிஷ்" என்றும் ஒரு பிரபலமான பெயரும் உண்டு. தன்னை வருத்திக் கொண்டு சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் இவர்களுக்கு இந்த இடுகைகள் பாத காணிக்கை. நண்பர் மதன் அவர்கள் அவர் மனதில் முதலிடம் பிடித்த சைட் டிஷ் செல்வாவிலிருந்து தொடங்குமாறு வேண்டியதால்


இதோ செல்வா....

சென்னைல வேலை தேடி வெட்டியா இருந்த காலம் அது. அப்போ அமைந்தகரைல ஒரு வீட்டுல மதன் ,செல்வா இன்னும் நாலு நண்பர்களும் (கஜா,ரவி,பிரகாஷ்,சாமி) தங்கியிருந்தாங்க.மதனுக்கு செல்வா கிட்ட வாய்க்கால் தகராறுன்னு எதுவும் இல்லை ஆனா செல்வாவின் ஹேர் ஸ்டைல் தான் கொஞ்சம் உறுத்தலா இருந்திருக்கு.குருவிக்கூட்டுக்குள்ள கோட்டான் நுழைஞ்ச மாதிரி முன் பக்கம் மட்டும் முறைப்பா வெறைச்சி நிக்கும், அங்க தான் பிரச்சனையேன்னு நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல். சரிப் பாவம் முடிக்கு அவன் என்ன செய்வான்னு மதன் பெரிய மனசு பண்ணி மறக்க முயற்சி செஞ்சாலும், இன்னொரு பெரிய விஷயம் அவருக்கு ரொம்பவே உறுத்தியிருக்கு. நியாயமா யாருக்குமே இத மன்னிக்க முடியாது,அந்த காலத்துல யார் கூட வேணும்னாலும் ரூம்ல தங்கலாம் "விஜய்" ரசிகனோட மட்டும் தங்க கூடாதுன்னு புதுசா ஒரு பழமொழியே உண்டு . அப்போ "விஜய்" டாக்டரெல்லாம் இல்ல வெறும் கம்பௌன்டரா இருந்த காலம்.இதுல செல்வா ,பிரகாஷ்,சாமி எல்லாரும் விஜய் ரசிகர்கள், அதுல பாருங்க செல்வா தீவிரமான ரசிகரா இருந்தது தான் மதன், ரவி,கஜாவுக்கும் கொஞ்சம் வருத்தம்.

ஒரு உதாரணம் சொல்லனும்னா நாங்க ஆறு பேரும் ஒன்னாத்தான் சாப்பிடப் போவோம் ஒரு மெஸ்ஸுக்கு.அங்க ஒரு அக்கா தான் சமையல் செய்வாங்க.குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தான் பழகுவாங்க.அந்த மெஸ்ஸுக்கு பேரு எதுவும் இல்ல,இத பார்த்த செல்வா "அக்கா, மெஸ்ஸுக்கு ஒரு ஸூப்பர் பேரு வெச்சா நல்லா பிக் அப் ஆகும்"னு சொல்லி தானே ஒரு சாக் பீஸ் எடுத்து, தண்ணில நெனைச்சி டிபன் ரெடின்னு இருந்த பலகை மேல "இலைய தலபதி விஜய் மெஸ்"அப்படீன்னு எழுதி வெச்சிப்புட்டாரு."விஜய்" தவிர மத்த எல்லா வார்த்தையும் தப்பா இருந்தது.கடுப்ப அடக்கிகிட்ட மதன், ரவி,கஜா, மதியம் வந்து கொஞ்சமா செல்வா எழுதினத மாத்தியிருக்காங்க. "இலைல பேதி" ங்குற மாதிரி என்னத்தையோ எழுதினது செல்வாவுக்கு செம கடுப்பு.அப்புறம் அத மாத்தி SACJV மெஸ்ஸுன்னு செல்வா மாத்தினதாக தகவல்.அதுக்கு எதுவும் பதிலடி கொடுக்காமலே இருந்திருக்காங்க ரவி, கஜா மற்றும் மதன்.அதையே செல்வா பெரிய வெற்றியா கொண்டாட ஆரம்பிச்சதும் கஜா நேரா மெஸ் அக்கா கிட்ட போய் "அக்கா கடைக்கு பேரு வெச்சா டேக்ஸ் கட்டனும்"னு ஒரு பிட்டப் போட்டதும், "ஐய்ய, அந்த கருமத்த இப்பவே அழிக்கறேன்"ன்னு அழுத்தி அழிச்சப்ப தான் இந்த மூனு பேருக்கும் சந்தோஷம்.



ஆரம்பத்துல மதன் உள்ளிட்ட மூனு நண்பர்களையும் அவர் "இளைய தலவலி" கட்சிக்கு மாத்தனும்னு அந்த வீனா போன பாட்டா போட்டு அலரவிட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சிருக்காரு நம்ம செல்வா.இத விட கொடுமை மதன் ரொம்ப மதிக்க கூடிய (விவேகானந்தர் இல்லீங்க) ஒரு வெளிநாட்டு டூ பீஸ் ஃபிகர் போஸ்டர் பக்கத்துல பசியில இருக்கறவன் இட்லிய பாக்குறா மாதிரி ஒரு ரியாக்ஷனோட (ரொமாண்டிக் லுக்) இருக்குற பஞ்ச் புகழ் விஜய் படம்.அதுல முன்னாடி ரெண்டு பல்லு மட்டும் வெளிய தெரியும், அதுல மதன் குழுவினர் கலை அம்சத்தோட கருப்பு மைப் பூசி மகிழ்ந்திருக்காங்க.அடுத்த நாள் காலைல புருவம் அடர்த்தியாகும், மதியம் சினிமா ரௌடி மச்சம் ரெடியாகும், இப்படி நாளொரு வண்ணமும் , பொழுதொரு வடிவமும் போஸ்டர்ல அப்டேட் ஆகி, இது யாரு படம்னு செல்வாவே ஆச்சர்யப்படும்படி செய்து செல்வாவோட வவுத்தெரிச்சல நல்லாவே கொட்டிகிட்டிருக்காங்க அந்த மூவர் குழு.



அப்பப்போ கொஞ்சம் வேலை கெடைக்காத வருத்தம் வரும்போதெல்லாம் எல்லாரும் ஒன்னா உட்காந்து டிஸ்கஸ் பன்னுவோம், அப்ப செல்வா சேர்ந்தா BPOல தான் சேரணும்னு தன்னோட லட்சியத்த சொல்லியிருக்காரு பலதடவை.மதியம் வேலை தேடி அலையாம சும்மா இருக்கும்போது விஜய் படத்தோட பாட்டு பொஸ்தவம் வாங்கி ரசிகர்கள் பாடி டார்ச்சர் பண்ணதும் அதுக்கு செல்வா தலைமை வகிச்சதும், குவார்ட்டர் கட்டிங்குல மாவா போட்டா மாதிரி ஆகிடுச்சு. மதன் அன் கோ. செல்வாவ கொஞ்சம் வெளிய வெச்சாத்தான் நல்லதுன்னு நெனைச்சு மதன் குழுவினர் ஒரு வேலைய செஞ்சாங்க.BPOல சேர ஒரு கோர்ஸ் இருக்கு சேர்ந்து அத முடிச்சு சர்டிஃபிகேட் வாங்கினா உடனே வேலை தான்னு சொல்ல, உங்களுக்கே நல்லாத் தெரியும் ஆடு யாரை நம்பும்னு...அடுத்த நாளே கோர்ஸ் சேர்ந்துட்டாப்டி செல்வா.



செல்வாவுக்கு கோர்ஸோட விவரம் எதுவும் தெரியாது, அது என்னவோ முக்கியமான கோர்ஸ்ன்னு நெனைச்சி ரொம்ப சீரியஸா ரெகுலரா போக ஆரம்பிச்சிருக்கார் செல்வா. யாரவது ஃபோன் செஞ்சா ," நான் ஈவனிங் கொஞ்சம் பிசி, BPO கோர்ஸ் இருக்கு"ன்னு சொல்லும்போது கூட மதன் அன் கோ வுக்கு இறக்கமே இல்லாம ரகசியமா சிரிப்பு வேற சின்னபுள்ளத்தனமா.பின்ன என்னங்க விவேகானந்தால ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல சேர்த்து விட்டவங்கள என்ன சொல்ல முடியும்?வேலை தேடறேன்னு சொல்றத விட கோர்ஸ் செய்யறேன்னு சொல்றது கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு தொடர்ந்து போயிருக்காரு. "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"ன்னு சொல்லும்போது எனக்கா இருந்தா கண்ல தண்ணி வந்திருக்கும்.



கோர்ஸ் முடிஞ்சதும் அதை ரெஸ்யூம்ல வேற போட்டார்ங்கறது உபரி தகவல்."என்னடா இது கோர்ஸ் பண்ணியும், வேலை கெடைக்கல"ன்னு புலம்ப ஆரம்பிக்கும்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிட்டாங்க மதன், கஜா மற்றும் ரவி. "ஒன்னோட மைனஸ் உன்னோட ஹேர் ஸ்டைல் தான், நாங்களே அதையும் சரி பண்றோம்னு சொல்லி".ஒரு சுபயோக சுபதினத்தில கையில கத்திரிக்கோளோட எறங்கிட்டாங்க.ஒரு தினமலர தரையில பரப்பி அதுமேல மஞ்ச பூசின ஆடு மாதிரி செல்வாவ உட்கார வெச்சி, தலைல தண்ணிய கொட்டி, எல்லா முடியையும் முன் பக்கமா வழிச்சி வாரி இருக்காரு கஜா,கத்திரியோட தயாரா மதன் , முன்னாடி கண்ணாடியோட ரவி,பின்னாடி நடக்கப் போறத பத்தி கொஞ்சம் கூட வருத்தப்படாத செல்வா நடுவுல இருக்குறாப்ல.

சின்ன புள்ளைங்களுக்கு எடுக்கர மாதிரி வகிடெடுத்து கஜா ஜூட் சொன்னதும் மதன் களத்துல எறங்கி தொழில் பழகியிருக்காரு.

"நல்லா வெட்டுவீங்களா"ன்னு கேக்கும்போதாச்சும் மன்னிச்சு விட்டிருக்களாம், ஆனா அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டங்க மதன் அன் கோ.

வேலையெல்லாம் முடிச்சிசதும்,இன்னிக்கு ஒரு கொலையோ அல்லது மூனு கொலையோ விழும்னு தெரிஞ்சி போச்சு அந்த மூவர் குழுவுக்கு. சரி சாப்ட போகலாம்னு மெஸ்ஸுக்கு கெளம்பியிருக்காங்க எல்லாரும். முகத்த மட்டும் கழுகிட்டு போனதும் மெஸ் அக்கா என்ன செல்வா "ஸ்னேக் பாபு" படத்துல மாதிரி இருக்கன்னு கேக்கும்போது தான் மைல்டா சந்தேகம் வந்திருக்கு.
 
 
 
 
 
என்று இந்த வீடியோ அனுப்பினார்.
 

21 comments:

Anonymous said...

//அடுத்த நாளே கோர்ஸ் சேர்ந்துட்டாப்டி செல்வா.// -பாஸ் நீங்க திருச்சி பக்கமா? நேட்டிவிட்டி நல்லா தெரியுது..

//அப்போ "விஜய்" டாக்டரெல்லாம் இல்ல வெறும் கம்பௌன்டரா இருந்த காலம்//
//பசியில இருக்கறவன் இட்லிய பாக்குறா மாதிரி// பாத்துங்க ஆட்டோ வர போகுது விஜய களாய்ச்சு இருக்கீங்க

கடைசியில நீங்க முடிச்ச ஸ்டைல் புதுசா இருக்கு.. அப்போ இது நெசமான சம்பவம்தானா???

பாரதசாரி said...

ஆமாம் பாஸ் நமக்கு திருச்சியே தான். உண்மை

ஆட்டொ ஓடாத ஊர வந்து செட்டில் ஆகிட்டோமுல்ல ;-)

உண்மை உண்மை சம்பவம்.பெயர்கள் (நண்பர் மதனைத் தவிர) மாற்றபட்டுள்ளன.

kashyapan said...

உண்மையாகவே அமெரிக்காவிலதான் இருக்கிறீர்களா? லேட்டஸ்ட் சினிமா டிரண்டு வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே! விடியோ அநியாயம் ஐயா! அந்தப் பையனுக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லையே. இருந்தாலும் சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்துவிட்டது....காஸ்யபன்.

Anonymous said...

super.. Expecting more

~Diwakar Sunderesan

Anonymous said...

சூப்பர்.. முடித்த விதம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தது.

அன்புடன்,
சரவணன்,
காங்கேயம்

நாரத முனி said...

வீடியோ ஏற்கனமே பார்த்தது தான்.. கதை நடை அருமை

மதன் said...

ஹாஹா தல முடியல நல்ல டயலாக்ஸ் //பின்ன என்னங்க விவேகானந்தால ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல சேர்த்து விட்டவங்கள என்ன சொல்ல முடியும்?வேலை தேடறேன்னு சொல்றத விட கோர்ஸ் செய்யறேன்னு சொல்றது கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு தொடர்ந்து போயிருக்காரு. "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"ன்னு சொல்லும்போது எனக்கா இருந்தா கண்ல தண்ணி வந்திருக்கும்.//

சூப்பரப்பு அடுத்து இங்கிலீக்ஷ் தொரைய எழுதுங்க..........

மதன் said...

சரி இந்த வீடியோ உங்க வேல தானே யாரு அந்த ஆடு பாவம் அவரு..........

மதன் said...

தல அப்புறம் இண்ட்லிலையும் உலவுலையும் பதிவ sumbitt pannunga......

பாரதசாரி said...

//உண்மையாகவே அமெரிக்காவிலதான் இருக்கிறீர்களா? லேட்டஸ்ட் சினிமா டிரண்டு வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே! விடியோ அநியாயம் ஐயா! அந்தப் பையனுக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லையே. இருந்தாலும் சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்துவிட்டது....காஸ்யபன். //

நன்றி காஸ்யபன் ஐயா. யூடியூப் இருக்குறதுனால காமெடி எல்லாம் பாப்பேன். நான் இங்க வந்து 9 மாதங்கள் தான் ஆகுது..

பாரதசாரி said...

நாரத முனி அவர்களே, இது கதை அல்ல நிஜம்...ஒரு குட்டை இங்கு உடைக்க விரும்பிகிறேன்...டுபாக்கூர் கந்தசாமி தான் அந்த மதன்;-)

பாரதசாரி said...

நெஞ்சார்ந்த நன்றிகள் திவாகர் மற்றும், சரவணன்

பாரதசாரி said...

நன்றி மதன்!!!
இண்ட்லி ,தமிழ்மணம் , உலவு ல குடுத்தாச்சு...இங்கிலீஸ் தொறை வந்துகின்னே கீறாரு.....

Anonymous said...

// "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"// - சிரித்தேன் சிரித்தேன் வயிறு வலிக்க, சிரித்தேன். இப்படியும் ஆளுங்க இருக்காங்களா!

வாழ்க வளமுடன்,
வினோத் குமார்

பாரதசாரி said...

Thanks Vinod:)

Unknown said...

யப்பா..... செம காமெடி. கலக்கீட்டீங்க போங்க.. வயிற்றைத்தான்.

பாரதசாரி said...

// வெண் புரவி:யப்பா..... செம காமெடி. கலக்கீட்டீங்க போங்க.. வயிற்றைத்தான்.//

இது பாராட்டுதானுங்களே? ;-)

பரிசல்காரன் said...

செம ஃப்ளோ ரைட்டிங்ல!!!

பாரதசாரி said...

// பரிசல்காரன் said...
செம ஃப்ளோ ரைட்டிங்ல!!! //

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பரிசல்,
நீங்க செம ஸ்பீடு ரீடிங்குல ;-) இன்னைக்கே படிப்பீங்கன்னு எதிர் பார்க்கலை.

Arun said...

hey as usual soopper... expecting something in the lines of british officer next....

பாரதசாரி said...

Arun check the comment from டுபாக்கூர்கந்தசாமி //
ஹாஹா தல முடியல நல்ல டயலாக்ஸ் //பின்ன என்னங்க விவேகானந்தால ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல சேர்த்து விட்டவங்கள என்ன சொல்ல முடியும்?வேலை தேடறேன்னு சொல்றத விட கோர்ஸ் செய்யறேன்னு சொல்றது கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு தொடர்ந்து போயிருக்காரு. "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"ன்னு சொல்லும்போது எனக்கா இருந்தா கண்ல தண்ணி வந்திருக்கும்.//

சூப்பரப்பு அடுத்து இங்கிலீக்ஷ் தொரைய எழுதுங்க.......... //

இங்கிலீக்ஷ் தொரைய = British Officer ;)

Post a Comment