"ஐயோ போய்ட்டியே", "நீ இல்லாம" ங்கிற மாதிரி ஒரே புலம்பல் .அதுல ஒருத்தரோட "ஐயோ" கணக்கு நூற தாண்டிபோய்கிட்டு இருக்கு.பின்ன என்ன சாவு வீட்டுல எந்திரன் பாட்டா போடுவாங்க? நமக்கு மணிக்கு ஒருக்கா தம்மடிக்கலைன்னா நாக்கு நமநமங்கும். வெளிய போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. இன்னிக்கு இந்தியா நியூஸீலாந்து கிரிக்கட் மேட்ச் வேற. அழுகை சத்தமும் கூச்சலும் சேர்ந்து தலையெல்லாம் வலிக்குறமாதிரி இருக்கு. என்னய பொருத்தவரைக்கும் பரிட்சை பேப்பரும், சாவும் ஒன்னு தான், கேள்விகள படிச்ச அஞ்சு நிமிஷத்துக்கு தான் அதோட தாக்கம், அப்புறமா சகஜ நிலைக்கு வந்துடுவோம்.சொன்னா நம்ப மாட்டிங்க இப்படித்தான் பேச்சு கேக்குது இங்க.
"பெரியவர் கிட்ட சொல்லியாச்சா?"(அக்கரை )
"ஆச்சு கார்ல கெளம்பிட்டாராம்"(விளக்கம்)
"சூமோ தான?"(வம்பு )
"இப்போ இன்னோவா வாங்கிட்டாரு"(அறிவு )
"அப்படியா? சூமோ ப்ரேக் சரியா இல்லன்னு சொல்லிகிட்டே இருப்பாரு , நானின்னும் அம்பாஸிடர மாத்தல".(பெருமை)
இதுக்கு பேசாம என்னய மாதிரி மௌனமா இருக்கறதே மேல் என்ன சொல்றீங்க?ஆண்கள் தான் இப்படின்னு பாத்தா நம்ம தாய்குலம் அதிபயங்கரம்! "காப்பி சொல்லி ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் வரலை".
யாராவது புதுசா வீட்டுக்குள்ள வந்தா மட்டும் திரும்ப 'ஐயோ' கணக்கு சென்செக்ஸ் மாதிரி எகிறும் அப்புறம் திரும்ப சகஜம்.
"அவன் கூட்டணி விசயத்துல இன்னும் தெளிவா இல்லப்பா"
இல்லேன்னா செல்ஃபோன்ல அசிலி பிசிலி பாட்டு, ரொம்ப பவ்யமா எடுத்து "ஒரு பெரிய காரியத்துல இருக்கேன், அப்புறம் பேசறேன்".
அல்லது "எலக்ட்ரிக் தான?"
சரவணன், அவன் தான் ரொம்ப பொறுப்பா இருக்குறதா காட்டிக்கனும்னு , மடக்கின நாற்காலிய விரிக்குறதும் , விரிச்ச நாற்காலிய மடக்குறதும்னு சும்மா கண்ல, கைல மாட்டுனதெல்லாத்தையும் வெச்சி ஒரு வழி பண்ணிக்கிட்டிருந்தான்.எல்லாம் செல்வி முன்னாடி சீன் போடத்தான், என்னோட மொறப்ப கண்டுக்காம "நீ நடத்துடி".
------------------------------------------------------
டாக்டர் சொன்னதை கேட்டபோது புவியீர்ப்பு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது.
"தம்பி ஒனக்கு எவ்வளவு வருசமா இந்த பழக்கம்?"
"பன்னெண்டாவதுலேந்து டாக்டர்"
"அதாவது பதினேழு வயசுலேந்து?"
"அதான் சொன்னேனே பன்னெண்டு வயசுலேந்து". டாக்டர் புருவம் உயர்ந்தது ஆச்சரியமா? அசூசையா எனக்கு அது அவசியமில்லை. வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.
திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.வாழ்க்கையிலே முதல் முறையாக உதவி செய்ய தோன்றியது."கிராஸ் பண்ணனுங்களா?", "ஆமாம் சார்" , அவரைப் பொருத்தவரை 'சார்' என்பது என் குரல்.அவர் சாலையை கடக்க உதவினேன் அவர் சட்டை பையில் இருந்த ஐநூறு ரூபாய் என் கைக்கு வரும்போது சாலையின் மறுபுறம் இருந்தோம்.தொட்டில் பழக்கம் என்று என்னை சபித்துக் கொண்டே, "பணம் கீழ விழுந்துச்சு, இந்தாங்க", சிரித்தபடி," தேவை இல்லாமலா அது உங்க கைக்கு வந்துச்சு, எதோ அவசரம்னு தானே எடுத்தீங்க பரவாயில்ல வெச்சிக்கங்க". என் நோயும் அதன் காரணத்தையும் விட இந்த நொடி என்னை கொன்றது.நேராக கடைக்கு போனேன்..."அண்ணேன்..
அடப்பாவிங்களா சும்மா செந்தமிழ்ல ஃப்லேஷ்பேக் சொல்லி தலைப்புக்கு வரலாம்னாம்னா அதுக்குல்ல நாலு பேரு என்னய தூக்கி கிட்டு ஆம்புலண்ஸ்ல ஏத்துரானுங்க... கோரஸ்ஸா "ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே...
இருங்க பாஸ் இப்போ வந்திடரேன்...

30 comments:
*முற்றும்*
:) நல்லா இருக்கு பாஸ்....
கலக்கல் பாஸ்!! உங்க பதிவு கலைல இண்டிலில பதிவு பண்ணேன்... அதுக்குள்ள பாப்புலர்...
Hi Terror,
Congrats!
Your story titled '"பாலிடாயில் குடுங்க"' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 10th September 2010 11:07:01 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/335826
Thanks for using Indli
Regards,
-Indli
தல ரைட்டு நடத்துங்க என்னமோ புது புது dimensional லா எழுதுறீங்க ஆனா உண்மைக்கு சில பல மேட்டர் எனக்கு புரியல
//வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.//
தல நாம தான் டியூப் லைட்டாச்சே இப்ப புரியுது எப்படியெல்லாம் எழுதுறாங்கப்பா..கலக்குங்க
அருமையான கதை. என் மனசையும் திருடிட்டீங்க
TERROR-PANDIYAN(VAS):
ரொம்ப ரொம்ப நன்றிங்க தல, நம்ம கதைய popular ஆக்கினதுக்கு .
drbalas: Thanks brother
டுபாக்கூர்கந்தசாமி:Thanks தல.வசந்த காலம் எப்போ வரும்?
கதை சொல்லும் டெக்னிக் ரொம்ப நல்லா இருக்கு...கம்ப்யூட்டர்ல கட் அண்ட் பேஸ்ட் இருக்கிறதை சரியாய் உபயோகித்து அழகாய் எழுதி இருக்கீங்க.
//திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.//-அழகான வார்த்தைகள்.
சாவு வீடு சூழ்நிலை அழகா கொண்டு வந்திருக்கீங்க.....
மொத்தத்தில் சூப்பர் போங்க.
//
வெண் புரவி said...

பாராட்டுகளுக்கும் , நீங்கள் கொடுக்கும் உற்சாகதிற்கும் ரொம்ப நன்றிங்க
""ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே..."
எனக்கும் தான் (சும்மா தமாஷு )
உங்க ப்ளாக் நான் இன்னிக்கு தான் பார்த்தேன் ..எழுதின விதம் ரொம்ப நல்லா இருக்கு ..
சாவு வீட்ல நடக்கற உண்மையான விசயங்கள் கூட நீங்க சொன்ன விதம் ரசிக்க தக்கது ..பகிர்வுக்கு நன்றி
நல்லாருக்கு தல!
Easily the most unique of all the posts so far... interesting because I am reading it for the first time unlike the previous ones, where i ve known before..
Hi Arun.Thanks.. this was devised after the demise of my father in law last month along with some essential ingredient(imagination)
Comrade என்ற வார்த்தைக்கு தோழா என்று முதன் முதலாக பயன்படுத்தியவர் பாரதியார்.சங்க இலக்கியங்களில் தோழி என்ற வர்த்தை பணிப்பெண்ணைக்குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.தோழா,தோ ழர் என்பதை இருபாலருக்கும் பயன்படுத்துவது மரபாகிவிட்டது.தொழி சந்தியா என்பதைவிட தோழர் சந்தியா என்று விளிக்கும்போது கம்பீரமாக,மரியாதை கூடுதலாகத் தோன்றுகிறது.---காஸ்யபன்.
I totally agree with you Kahyaban sir!
நெஞ்சார்ந்த நன்றிகள் தோழர் சந்தியா ;-)
நீ என்னய்யா இப்படி கலக்குற
எனக்கு அமெரிக்கா விசா கெடைச்சதவிட விசா அண்ணணின் பிண்ணுட்டம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நன்றி அண்ணே!!!
GOOD ONE .....,
யோவ் டெர்ரர் ,
வாழ்கையிலேயே நீ பண்ண ஒரே உருப்படியான காரியம் இதுதான் .....,
Thanks boss!!!!
Thanks தியாவின் பேனா
R U LAZY.WAKE UP AND START WRITING...KASHYAPAN.
வணக்கம் அய்யா!, கொஞ்சம் வேலை பளு அதிகம், கண்டிப்பாக எழுந்து எழுதுவேன்!!
அருமை..அருமை
/ பார்வையாளன் said...
அருமை..அருமை
/
:-) நன்றி நன்றி
கலக்கல்
ரொம்ப நன்றி பட்டாபட்டி அண்ணேன்
வித்தியாசமா இருக்கு உங்க நடை. ரொம்பவே ரசித்தேன் பா.சா!
பிரமாதமான நடை! கலக்கிட்டீங்க!
The thrill of this story is mainly unraveling the knot when the story jumps a hoop and moves the narration from the "anonymous" voice over watching the "deathly" proceedings to the person making the choice to reach the proceedings..Again I love the way you challenge the reader's intellect to piece together the seemingly disconnected pieces into a coherent thread.That thrill of piecing together the puzzle is the delight you achieved..Really a unique one.
Post a Comment