நான் : சினிமா விமர்சனம் எழுதனும்னு ஆசையா இருக்கு, என்ன சொல்றீங்க?
நாரத முனி: நீ எதுவுமே எழுத வேன்டாம்னு நெனைக்கறேன்...;-)
நான்: ஏன் :(?
நாரத முனி: சும்மா சொன்னேன், (சீரியசா சொன்னா மட்டும் கேக்கவா போற?) இப்போ வர்ற எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கும் போது விமர்சனமும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதுக்குன்னு ஒரு டெம்ப்லேட்டே வெச்சிருக்காங்க, வெறும் பெயர்கள், ஃபோட்டோ மட்டும் ஃபீட் பன்னா போதும் மற்றபடி விஷயம் ஒண்ணே தான் இருக்கும்.
நான்: ??
நாரத முனி: சரி சும்மா எழுத பழகனும்னா கம்ப ராமாயணத்த சினிமா விமர்ச்னம் பானியில முயற்சி செய்யலாமே? நாரயண நாரயண....
ஹிந்தியில் வந்த 'ராமாயண்'இன் தமிழ் ரீமேக் இது என்பது எல்லோரும் அறிந்ததே.டீ.ராஜேந்தருக்கு அடுத்து தமிழில் கதை , வசனம் எழுதி,பாடல் எழுதி, இயக்கியிருப்பவர் கம்பர். ஆனால் டிக்கெட்டும் கிழித்து கொடுக்கும் TRஐ தன்னால் என்றும் மிஞ்ச முடியுமா என்பது கேள்விக்குறியே என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கம்பர்.
அஷ்வமேத யாகத்தோடு துவங்கி நாயகன் ராமனின் பால்யம் வரை கொஞ்சம் வள வள என்று கதை இருந்தாலும், சிறுவர்கள் ராமன் , லக்குமனன், பரதன் மற்றும் சத்ருக்னனின் துடிப்பான கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர்கள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் "அஞ்சலி" , "அழகி" யை நினைவூட்டினாலும் ரசிக்க முடிகிறது. ஒற்றுமையாக மூன்று மனைவிகளோடும் நான்கு மகன்களோடும் அரசராக வரும் தசரதர் தனது கதா பாத்திரத்தை உணர்ந்து நன்றாக செய்துள்ளார். ஆரம்பத்தில் நல்லவளாக இருக்கும் கைகேயி , பின் எக்கணமும் மாறக் கூடும் என்பது யூகிக்க முடிவதால் அவ்வளவு சுவாரசியம் இல்லை. மந்திரை கிழவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஒரு ரௌன்ட் வருவாங்க.
மிதிலையில் கண்ட உடனே காதல் வயப்படும் காட்சி ஒரு அழகிய ஹைக்கூ. அதற்காக வில்லை உடைக்கும் காட்சி C செண்டருக்கான பிரதியேக விருந்து.அப்போது வரும் "வில்லு வில்லு வில்லு" பாட்டிற்கு கிழவிகளே தம்மடிக்கப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திருமணம் முடிந்து ஊர் திரும்பும் தம்பதிகளை ஊரே வரவேற்கும் பாடல் மனதில் நிற்கவில்லை ஒரே இரைச்சல்.பின் பட்டாபிஷேகம் நடக்கும் போது மந்திரையின் அறிவுரைப்படி கைகேயி தன் மகன் பரதனுக்கு தான் அரசாலும் உரிமை வேண்டும் என்றும் தனக்கு தசரதர் வாக்கு கொடுத்ததை ஃப்லேஷ் பேக்கில் சொல்லுவது நல்ல திருப்பம். ஆனால் கைகேயியின் பாத்திரப் படைப்பு மெகா சீரியல் வில்லியை ஒத்ததாக இருப்பது சலிப்பூட்டுகிறது. 14 வருடங்கள் காட்டில் இருக்க ராமன், லக்குமனன், சீதை கிளம்பி செல்வது மனதில் பாரமாக ஆக்குகிறது "போறாளே பொன்னுத்தாயீ" பாடல்.கதையின் இரண்டாம் பகுதியில் entry கொடுக்கும் அனுமார் கதாப்பாத்திரம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது.காமெடி டிராக் என்று தனியாக இல்லாமல் கதையோடு வருவது ஆறுதல்.குணச்சித்திர வேடமும் நன்றாக வருவதால், இவர் வெகு விரைவில் சிரன்சீவிக்கு போட்டியாக வாய்ப்பு அதிகம்.
சீதையின் அழகில் மயங்கிய இராவணன் , வழக்கமான டாட்டா சுமோவை கொண்டு கடத்தாமல் , புஷ்பக விமானத்தை உபயோகிப்பது தமிழுக்கு புதியது.அனுமார், ABT Parcel Service விளம்பரத்தைப் பார்த்து விட்டு தானும் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் காட்சி கலகலப்பாக இருக்கிறது.லாஜிக் இல்லாவிட்டாலும் CG சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.கிலைமாக்ஸில் மாயாவி வித்தைக் காட்டி இராவணன் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றும்போது எந்திரனின் ஆயிரம் 'சிட்டி' நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.வழக்கம் போல் யுத்த கடைசியில் ஹீரோ வெற்றி பெறுவது போன்ற சாதாரண முடிவு சப்பென்று தோன்றுகிறது.
இலங்கைப் பிரச்சனையை சற்று மேலோட்டமாக அனுகியிருப்பது கதையின் பெரிய மைனஸ்.நிறைய கதாப்பாத்திரங்கள் இருப்பதால் எல்லா காட்சிகளும் நினைவில் இருப்பது சற்று கடினமாக இருக்கிறது.மொத்தத்தில் கதை சொன்ன விதம் நன்றாக இருப்பதால் , கம்பர் - TIMBER(ஏன் எதுக்குன்னெல்லாம் கேக்கப்டாது).
.
19 comments:
சண்முககுமார் :ரொம்ப நன்றி பாஸ்... படித்தேன் :-) Wish you a happy 2011
ஹாஹாஹா.....//மந்திரை கிழவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஒரு ரௌன்ட் வருவாங்க.//
கலக்கல் தல......வித்தியாசமான முயற்சி.....
இன்னும் எதிர்ப்பாக்குறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தல.
MADHAN,Thank u very much and wish you and your family a great new year!!!
hi u r back with a banag nu solla mudilanaalum nice to see "SOMETHING AGAIN".... thirai vimarsana language la sollanumna "ORU THABAA PADIKALAAMBA!!!!"
You should write review for "Sabari" and "Viruthagiri". Vijayakanth rasigargal aavaludan kaathurikiraargal......
Sure Vijay- Will come with that
மூன்று மாதம் கழித்து வந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.அன்புடன்---காஸ்யபன்
// kashyapan said...
மூன்று மாதம் கழித்து வந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.அன்புடன்---காஸ்யபன்
//
மிக்க நன்றி ஐயா - Happy new year and upcoming golden jubilee celebration
:)super mapla...nalla oru thinking :))
ரொம்பவே தாமதமாய் இன்று தான் படித்தேன். நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள். அடிக்கடி பதியுங்களேன்..
ரொம்ப நன்றி மோகன் ஜீ , கண்டிப்பாக தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன்
seriyaaaa irundhuchu machi... sema kalakkal vimarsanam.
Kambar timber. lol...
vimarsanam mosama irundhirundha.. kambar dumber
Harish - Thanks!!!
Super! ஒவ்வொரு பதிவையும் வித்யாசமாக செதுக்குகிறீர்கள்!
Thanks bandhu ji... we should meet here in US if possible...
funny..:)
:இலங்கைப் பிரச்சனையை சற்று மேலோட்டமாக அனுகியிருப்பது கதையின் பெரிய மைனஸ்"
னுமார், ABT Parcel Service விளம்பரத்தைப் பார்த்து விட்டு தானும் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் காட்சி கலகலப்பாக இருக்கிறது.
Hahahaha
Enjoyed reading it :)
Thanks JK,
with such positive comments I am encouraged to write more and better!,
Cheers!
//"வில்லு வில்லு வில்லு" பாட்டிற்கு கிழவிகளே தம்மடிக்கப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை//
ஹாஹா...ஹாஹா...
வித்தியாசமான முயற்சி.
தூள் கிளப்புறீங்க..
நன்றி தோழரே, ரொம்ப நாட்களாச்சு?
Post a Comment