காய்ச்சல் வந்தால் கூட "வைரல் ஃபீவராக" இருந்தால் தேவலை என்றெண்ணும் அளவுக்கு எனக்கு வைரஸ் மேல் ஈர்ப்பு.நான் சொல்வது மென்பொருள் கிருமி. ஒரு முறை மிகப் பாதுகாப்பான வங்கி என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒரு புகழ் பெற்ற வங்கியின் உள்ளே சென்று கல்லா நிலவரம் பார்த்தாகிவிட்டது , மற்றொரு முறை பல்கலைக்கழக மதிப்பெண்களைக் கூட ஒற்று பார்த்திருக்கேன், ஷேர் மார்கெட் வலைக்கு சும்மா மூர்மார்கெட் மாதிரி தினமும் இரு முறை சென்ற ஒரே வெளி நபர் நானாகத் தான் இருக்க முடியும்.இது வரை எந்த முறையும் மாட்டிக்கொள்ளாதது எவ்வளவு பெரிய சாதனை என்பது மென்பொருள் விற்பன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.எந்த தகவலையும் மாற்றி சுயநலனுக்காக என் அறிவை பயன்படுத்தியது இல்லை. எதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ அவையனைத்தையும் செய்து முடுத்திவிட்டதால் என் மௌன வெற்றிகள் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்போது தான் அந்த மின்னஞ்சல் வந்தது.
"அன்புள்ள நண்பரே,
நீங்கள் புவியின் தலை சிறந்த ஹேக்கர் என்பதை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம்." என்று தொடங்கி நான் எந்தெந்த தேதியில் எந்தெந்த வலைகளை தடைகளை உடைத்து சென்றுள்ளேன் என்பதும் அதற்கு நான் எடுத்து கொண்ட நேரமும் மிகக் கவணமாக பட்டியல் இடபட்டிருந்தது.
"எந்த ஒரு ஹேக்கராலும் எங்கள் வலையை தகர்க்க முடியாது, முயன்று நீங்கள் வென்றால், உங்கள் திறமையை நல்லதொரு நோக்கதிற்கு பயன் படுத்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எங்கள் வலை ஒரு சாதாரண வலைதள வியாபார வலை என்பதால் அலட்சியம் காட்ட வேண்டாம்.தேவைப்பட்டால் ஒரு சோதனை செய்து பாருங்கள், இலவசமாக எதாவதொரு பொருளை நீங்கள் பட்டியலிலிருந்து டௌன்லோட் செய்துக் கொள்ளலாம்."எனக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பட்டியலில் புத்தகங்கள் என்ற பத்தியை தேர்ந்தெடுத்தேன். புகழ் பெற்ற புத்தகமென்றால் அது மிக எளிமை என்பதால் எனது நான்காம் வகுப்பு தமிழ் நூல் என்று டைப் அடித்தேன். வலை தலைச்சுற்றிப் போகும் என்றெண்ணிய எனக்குத் தான் தலை சுற்றியது.திரையில் "இதுவரை பனிரெண்டு முறை நான்காம் வகுப்பு தமிழ் நூல் மாறியிருப்பதால் வருடத்தை குறிக்கவும்" என்றது. இதில் என்னவோ விஷயம் இருக்கத்தான் செய்கிறது என்று அப்போது தான் உணர்ந்தேன். 1990 என்று டைப்பியது தான் தாமதம், "புத்தகம் சேருமிடத்தை தேர்ந்தெடு" என்று அதட்டியது. பொதுவாகக் கோப்புக்களை சேர்ப்பிக்கும் இடம் கணிணியின் 'C' அல்லது 'D' என்ற ஹார்ட்டிஸ்க்கையே காட்டும், ஆனால் இப்போது என் திரையில் நான் பார்ப்பது என் அறையில் உள்ள மேஜை.நம்பவும் முடியாமல் , புறம்தள்ளவும் முடியாமல் மேஜையின் வலது ஓரத்தை அதில் தேர்ந்தெடுத்தேன். "டௌன்லோடிங்க்....3 வினாடிகள் பாக்கி உள்ளன..." என்று சொன்ன திரையின் மேஜையில் என்னால் புத்தகத்தை பார்க்க முடிந்தது.என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, உருப்பொருளாக ஒரு புத்தகம் என் மேஜையில் இருந்தது. எல்லா பக்கங்களையும் பார்த்தேன்.உண்மையிலேயே அது புத்தகம் தான், என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் வலித்தது, நூலின் ஒரு பக்கத்தை கிழித்தேன் கிழிந்தது!
துணிவிருந்தால் போட்டியை ஒப்புகொள்ள "சம்மதம்" பொத்தானை அழுத்தவும் என்றது."துணிவிருந்தால்" என்ற வார்த்தை ப்ரயோகத்தில் ஒரு கேலி இருந்தது ,பொத்தானை அழுத்து இல்லயென்றால் பொத்திக்கொண்டு போ என்பது போல் இருந்தது. அழுத்தினேன் பொத்தானை.திரையில் ஒரு கனவு ரோஜாத்தோட்டப் பின்னனியில் அப்லோடிங்க் என்றது, எனக்கு லேசாக மயக்கம் வந்தது.முற்றிலும் மயங்கும் முன் ரோஜா வாசனை மட்டும் நியாபகத்தில்....
(தொடரும்)
5 comments:
ஐயா தெய்வமே, எனன இது? நான் இன்னைக்குத்தான் புதுசா வரேன், ஒண்ணுமே புரியலையே??
பா.ராகவன் தீவிரவாதம் பற்றி எழுதிய புத்தகத்தின் விமர்சனமாக இருக்கும் என வந்தேன்.வசமாக வலையில் சிக்க வைத்து விட்டீர்கள்.வலிய சென்று வலையில் சிக்குவதும் சந்தோசமாகவே இருக்கும் சில சமயம்.அதில் ஒன்று இதுவும்.தொடருங்கள் பாத sorry பாரதசாரி.
அன்பில் தோழர் Jayadev Das,
இது கொஞ்சம் புரிவது கடினம் தான் :-) ஒப்புக்கொள்கிறேன் . மற்ற என் பதிவுகளில் இந்த குழப்பம் இருக்காது என்று உறுதி அளிக்கிறேன்.
சகோதரர் ஷோக்கா sorry சேக்காளி,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.:-)
sooper thala scifi katha ya nala irruku adutha pagam padichittu varren
Post a Comment