Tuesday, April 7, 2020

நீதி கதை: சக்திக்கு மீறிய ஆசை ஆபத்து



ச்சீ ப்பே த்தூ என்கிற புகழ் பெற்ற ஜென் துறவியிடம் ஒரு முறை , துங்க் லீ என்ற விவசாயி வந்தான்.தனக்கு ஒரு சந்தேகம் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஒரு கோரிக்கையாக தன் கால் காணி இடத்தில் ஆயிரம் மூட்டைகள் நெல் விளைச்சல் ஆக அருள் வேண்டினான்.
தனக்கே உரிய தெய்வீக புன்னகையோடு ஒரு குட்டி நீதிக்கதை சொல்ல துவங்கினார்.

வூஹான் காட்டு பகுதியில் இருந்த ஒரு ஆண் எலி அங்குள்ள பல பெண் எலிகளை பலவந்தப் படுத்தி காமுற்றது.பின்னும் அதன் இச்சை அடங்காமல் காம வெறியுடன் சுற்றலானது. இப்படி ஒரு முறை தன் இச்சைக்கு இரையை தேடி சென்ற எலி, ஒரு காட்டு யானையை கண்டு மோகம் கொண்டது.யானையிடம் தன் காம வீர பிரதாபங்களை சொல்லி..தன் ஆசைக்கு இணங்கினால் கரும்புகள்  தருவதாக வாக்களித்து தனிமையில் ஒரு இடத்தில் கலவி செய்ய அழைத்தது. யானையும் கரும்பி தின்ன எலியா என்று ஏளனம் செய்யாமல் ஒப்புக்கொண்டு, ஒரு தென்னை மரத்தின் அடியில் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்து நின்ற படி எலி தந்த கரும்பை தனக்கே உரிய அசைவும் ஆட்டமுமாக சுவைக்க துவங்கியது. எலி தனது பராக்கிரமத்தின் விளைவாகத் தான் யானை அசைகிறது என்று மமதையில் ஷேக் இட் பேபி என்று உரக்க கத்தியது.யானையின் உராய்வால் தென்னை மரத்தில் இருந்த ஒரு தேங்காய் தொப்பென்று யானையின் முதுகில் விழுந்தது.வலியால் யானை ஆ என்று முனக..எலிக்கு மேலும் மேலும் மோகம் கூடியது. "வலிக்குதா? இன்னும் பத்து நிமிடம் தான்" என்று தலை கணத்தோடு சொல்லி யானையின் தேகம் யாவிலும் கீதம் பாடியது. இப்போது உராய்வதால் மரத்திலிருந்த பெரிய மட்டை ஒன்று சரியாக எலியின் மீது விழுந்து எலி பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தது.

என்று முடித்தார். "புரிந்ததா? தெளிந்ததா? ஏதோ சந்தேகம் என்றாயே அதையும் கேள்" என வாஞ்சையோடு கேட்டார்.

அதற்கு அவன் "சாமி உங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்ற சந்தேகம் இருந்தது, அதை கேட்காமலே அதை உணர்த்தியதால், என் கோரிக்கைக்கு அவசியமே இல்லாமல் போயிற்று" என்று நெகிழ்ந்தபடி சொல்லி விட்டு காணிக்கை தட்டில் அவன் போட்ட காசுகளை அள்ளிக் கொண்டு வீடு திரும்பினான்.