Thursday, December 13, 2012

சினி(க்) செய்திகள் - 1


நாகைய்யா , வீ எஸ் ராகவன் , மற்றும் பாலைய்யா மூவருக்கும் தங்கள் இளம் வயதில் அப்பா வேடத்திற்கு கடுமையான போட்டி நிலவியது.அந்த காலகட்டத்தில் ,இம்மூவரில் இருவர் அண்ணன் தம்பி ரோலில் நடிக்க , மிஞ்சியிருப்பவர் அப்பா ரோலிலும் நடித்தால் யாருக்கு அப்பா வாய்ப்பு என்று பத்திரிகைகளில் புதிர் வரும் அளவிற்கு மிகவும் பொருத்தமானவர்கள் அவர்கள்.இம்மூவரையும் இவர்களது தந்தைகளே அப்பா என்று அழைத்தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் உ
ள்ளன.பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட அப்பா ஆர்டிஸ்ட் வீ எஸ் ராகவன்.மிமிக்ரியை பல முறை , கண்டித்தவர் வீ எஸ் ராகவன். ஒரு முறை மிம்க்ரி சேது
"மிமிக்ரி செய்தா என்ன தப்பு?" என்று கேட்க "மிமிக்ரி பண்ணனும்னா அவனவன் குரல்ல பண்ண்ச் சொல்லுங்கோ , ஏன் இன்னொருத்தர் மாதிரி பண்றா " என்று சீறினார்.யார் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற போது "மாப்ளை பையனோட அப்பாவ கூப்டுங்கோ" என்று சொல்ல சட்டுன்னு இவர் கிளம்பிப் போக , பெரிய களேபரமே ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அப்பா(வி) அவர்.


********************************************************************************


பத்திரிகையை பகைத்துக் கொண்ட தொப்பி - பத்து நடிகர் 
"பேசாம அவிங்க மேல மான நஷ்ட்ட வலக்கு போட்டுருவோமா?" என்றதற்கு அவர் மைத்துனர்,
"ஐயோ ஒத்து பாவா ,வேணாம் ... பொய் கேஸ் போட்டா போளீஸ் புடிச்சிக்கும்" என்று எச்சரித்தாராம்.
********************************************************************************கமலின் விஷ்வரூபம் DTH முறையில் முதல் நாளே வருவது தெரிந்து விஜய டீ ராஜேந்தரும் அதே போல் தனது வீராச்சாமியை வெளியிட, லோக்கல் கேபிள் ஆப்பரேட்டரிடம் கேட்டதற்கு அவர்கள் எல்லோரும் கோரஸாக தலைமறைவாகிவிட்டார்களாம்.ஆகவே தானே ஒர் வாடகை சைக்கிளில்,வீராச்சாமி சீ டீ , டெக் , கலர் டீ வீ சகிதமாக சென்னையை வலம் வருகிறராம் வீ டீ ஆர்.தி நகர் பஸ் ஸ்டேண்டு , மாம்பலம் மார்க்கெட் பகுதி போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூவிக் கூவி யாவாரம் செய்ய திட்டமாம்.சைக்கிள் பாரில் உட்கார்ந்து படம் பார்க்க குறைவான கட்டணம் , சீட்டில் உட்கார கொஞ்சம் அதிகம் , கேரியரில் அனுமதி இல்லை.இந்ததப் புதுமைக்கு முன்வீலுக்கு காற்றடித்து சிம்பு துவக்கி வைக்கத் திட்டமாம்.

கரெக்டா அடிப்பா காத்து, இல்ல கீழவிழுந்து அடிபடும்...பாத்து.


********************************************************************************ரஜினி எனக்கு மிகப் பிடித்த நடிகர்.அவர் பிறந்த நாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டி இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு ,கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்துபவன் தான் நான். ரஜினி டயலாக்கில் எனக்கு பிடிக்காதது "நான் ஒரு தடவை சொன்னா..." நல்லா யோசிச்சி பாருங்க அதுல ஏதாவது விஷயம் இருக்கா?ஒரு தடவை சொன்னா என்ன? நூறு தடவை சொன்னா என்ன? செயல் தானே முக்கியம்.சொன்னது ரஜினி என்றதால் எல்லாரும் ரசித்தார்கள்.

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா?

அதே போல் நாயகன் கமலின் "நாலு பேருக்கு நல்லது..." பற்றி நாளைப் பார்ப்போம் :)********************************************************************************.
*செய்திகளில் உண்மை கொஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.