Sunday, July 7, 2013

நிறுத்"தற்குறிகள்"



என் இடம் மாறினால் எண்ணமெல்லாம் மாறும் என,

அன்று புவனா என்றென்றும் வால் பகுதியா நான்?
இன்று அமுதா இங்க மட்டும் என்ன வாழுதாம் !

தேவை தான்                      அண்ட வெளியாய் , தட்டச்சுப் பலகையில் நீண்டதாய்

கோலம் என்றால் அழகு தங்கள் யாருக்கும் அந்த அவப்பெயர் இல்லையே :

நாய் குடையழகே உன்னில் நான் பாதி ஸீ யைக்கேள் எனது வலிமையை;
குறிப்பா சொல்லனும்னா வாங்க இங்கே இருக்கோமுள்ள 'நாங்க'
நோட் பண்ணுங்கப்பா " கோட் பண்ணுங்கப்பா"

தயக்கத்தை சொல்ல மட்டும் தான் ...

திறக்கும் போதோ அழுகின்றார் :(
மூடும் போதோ சிரிக்கின்றார் :)

நிறுத்'தற்க்குறிகளுக்கு" நிதானம் வேண்டும்,
நயவஞ்சகம் நயாமாகுமா? நியாயமாகுமோ?
சிந்திப்பீர் சற்றே!

ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லுங்கள்;
                           சொல்வது ஒன்றும் புரியவில்லை
 ...இல்லை :இனி பேசி பிரயோசனம் இல்லை.


moral: பங்சுவேஷன் பேசினால் பாழாகும் பொயட்ரி

வாசகி கடிதம்:

உங்கள் எழுத்துக்களை எழுத்துகூட்டி படிக்கும் அழகிய இளம் பெண் வாசகி நான்.
குறிப்பாக உங்கள் 'ழ'கரம் மற்றும் குற்றியலிகரம் சேரும்போது.. அது அமரத்துவம் பெருகிறது.
உங்களைப்போல் சிறந்த எழுத்தாளர்களை தமிழகமே கொண்டாட வேண்டும், ஆனால்,
 இங்கு தமிழ் சூழல் அப்படி இல்லை.அதற்கு உங்கள் தீர்வு என்ன?
- சரோஜா (ஏர் ஹோஸ்டஸ் ராசிக்குப்பம்)
------------------------------------------------------------------------
அன்பின் வாசகி,
உங்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் நீங்கள் ஏர் இந்தியாவில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக
பணிப்புரிவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனுப்பி வைத்த ஃபோட்டோவிலும்
முக'வரி'க‌ள் தெற்றென விளங்கியது. நீங்கள் ஒரு வீல் சேரில்
வந்து பிரயாணியான எனக்கு தீர்த்தம் அளிப்பதையும் கண்டுள்ளேன்.
மிக்க மகிழ்ச்சி அழகிய இளம் பெண் வாசகி சரோஜா.என் எழுத்தில் உங்கள் பெயர் எப்படி ஜொலிக்கிறது பார்த்தீர்களா?

Font பிடிக்கவில்லையென்றால் மாற்றி அனுப்புகிறேன். என் எழுத்துக்களில் மெய்யெழுத்து (குறிப்பாக அந்த புள்ளி) எந்த திசை
நோக்கினாலும் அது ஆகப்பெரும் சிறப்பாக அமைய உங்களைப் போன்ற இளம் வாசகிகளின் ஊக்கமும் காரணம்.
விமானப் பிரயானத்தின் ((என் எழுத்து மட்டும் அல்ல என் எழுத்துப் பிழையையும் சேர்த்து ரசியுங்கள்) )போது வீல் சேரில் அமர்ந்தபடி ,என் எழுத்துக்களைப் படிக்கும் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...
அதை தனிப்பட்ட முறையில் மின் அஞ்சலில் அனுப்பிகிறேன் (நாகரிகம் கருதி).

என் தீர்வு: என் பெயரை தீபாவளி அல்லது பொங்கல் என்று மாற்றி வைக்கத் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகமே கொண்டாடும்.. முதல்வரும் வாழ்த்துக்கள் என்று சொல்வார்,இவ்வளவு ஏன் பிரதமருக்கு மேலிடத்து அனுமதி
கிடைத்தால் அவரும் வாழ்த்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது இல்லையா?

உங்கள் மூட்டு வலி தேவலையா?

இப்படிக்கு
-பிரபல எழுத்தாளர் தீபாவளி/பொங்கல்(வெண்)/ரம்ஜான்/விஷு(கேரளத்தில்)/கிருஸ்துமஸ்(உலகளவில்)