Wednesday, September 1, 2010

சைட் டிஷ் 2 - வெள்ளைச்சாமி

எல்லாருக்கும் ஒரு சைட் டிஷ் இருக்குற மாதிரி எல்லாரையும் சைட் டிஷ் ஆக்குறவங்க சில பேர் தான் இருப்பாங்க அந்த வகைல "வெள்ளைச்சாமி"ன்னு பட்டபேரு என்னோட ஒரு நண்பனோட நண்பனோட நண்பனோட நண்பனோட .... நண்பனுக்கு.நெஜ பேரு என்னன்னு மறந்து போச்சு. ஆள பாத்தா "ஷ்"ல பேரு முடியறா மாதிரிதான் இருப்பாரு (அதாங்க அந்த விக்னேஷ், சுரேஷ், சதீஷ் வகைராக்கள்)பட்டப்பெயருக்கு காரணம் மட்டும் நல்லா நியாபகம் இருக்கு. இவர் ராத்திரி எழுந்து "வைதேகி காத்திருந்தாள்" விஜயகாந்த் மாதிரி துடிப்பா இருப்பாரு,ஒரே வித்தியாசம் இவர் பாடமாட்டார் பாடா படுத்துவார்.
என்னோட நண்பர்கள் சிலர் வேலை தேடி பெங்களூருக்கு வருவாங்க, யார் இன்டர்வியூ, வேலைதேடி, அல்லது பரீட்சைன்னாலும் மடிவாலாவுல இருந்த நம்ம தோஸ்த் அருண் அடைக்கலம் குடுப்பார். அங்க போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர் குழாம் இருக்கும். அப்படி ஒரு நண்பனுக்கு அடைக்கலம் கேட்டு போகும்போது தான் வெள்ளைச்சாமிய முதல் முறையா (கடைசியும்) பாத்தேன்.அருண் சொன்னான் , "அடுத்த வாரம்தான உன் ஃப்ரெண்ட் வர்றான், பாத்துக்கலாம்". இது வரை அவன் இல்லயென்று சொன்னதே இல்லை. "நாளைக்கு லீவு தான இங்கையே தங்கிட்டு ரெண்டு ரௌண்ட் ரம்மியும் நாலு ரௌண்ட் MC யும் போட்டு போயேன் " என்றான். "மீட் வெள்ளைச்சாமி"ன்னு அறிமுகபடுத்தினான். நானும் அறையிலிருந்த சகாக்களோட ஐக்கியமாகிட்டேன்.ரம்மி களைகட்ட அப்பப்போ மட்டும் பேசின வெள்ளைச்சாமி கொஞ்சம் சுருதி கூடக்கூட ரொம்பவே பேசினான். ரம்மி, சரக்கு, உணவு எல்லாம் முடிய ராத்திரி 12:30 ஆகிட்டது. எல்லாரும் படுக்கும் முன் வெள்ளைச்சாமி அலாரம் செட் பண்ணிட்டு மெத்தையில படுத்துகிட்டான்.. சரியா ஒரு மணிக்கு அலரம் அடிக்க அரை போதையில் நான் எழுந்து கிட்டேன், அருண் என்னவோ ஆஃபீஸ் போகிறவன் போல் ஃப்ரெஷா உட்கார்ந்துகிட்டான்.வெள்ளைச்சாமி "இன்றைய ஹிட் லிஸ்ட் குடுங்க " என்றதும் என்னைத் தவிர எல்லாருமே ஒரு பெயர், ஃபோன் நம்பர் அப்புறம் சில தகவல் இருந்த பேப்பர குடுத்தாங்க.எல்லாருமே ரொம்ப ஃப்ரெஷா இருந்தது தான் எனக்கு ஒரே ஆச்சரியம்.எனக்கு சரக்கு எஃபக்ட்டு, தூக்க கலக்கம் எல்லாம் போக இந்த வித்தியாசமான சூழல் வேற.என்னோட குழப்பத்த புரிஞ்சிகிட்ட வெள்ளைச்சாமி," பாஸ் உங்களுக்கு யார் மேலியாச்சும் செம காண்டா இருந்தா, அவங்க பேரு, லேன்ட்லைன் நம்பர் மட்டும் குடுங்க, ஒரு பூஜை செஞ்சிடலாம்" அப்டின்னு விளக்கம் குடுத்தான்."இருக்காரு இருக்காரு..எனக்கு தெரிஞ்சு ஒரு..."ன்னு நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே "ஸ்டாப் பாஸ், அந்த டீட்டெயில ஒரு பேப்பர்ல எழுதி குடுங்க". குலுக்கல் முறையில் குலுக்கி முத சீட்டை எடுத்தான் . "நம்ம முதல் பலி கடா லால்குடி குருநாதன்( என்னால் பரிந்துரைக்கப் பட்டவர்) , ஹௌசோனர்ங்குற திமிரில ஒங்க கிட்ட அலப்பரய குடுத்திருக்காரு ஓகே கொஞ்சமா கலாய்ச்சாப் போதும்னு சொல்றீங்களா?"ன்னு ஃபோன் அடிச்சான் வெள்ளைச்சாமி...மொபைல் ஸ்பீக்கர் ஆன் செஞ்சி விட்டான்.

பதினைந்துக்கும் மேல் ரிங்கடித்ததும் பதட்டமா ஒரு குரல்

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "ஹலோ சௌக்கியமா?"

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "நான் யாராயிருந்தா சௌக்கியமான்னு சொல்லுவீங்க?"

குருநாதன்: "நான் லால்குடி குருநாதன்"

வெள்ளைச்சாமி:"அது தெரியும் சார்.உங்களுக்கு சுகுமாரன் தெரியுமா?"

குருநாதன்:"சு..கு..மா...ரன்னு யாரையும் தெரியாதே"

வெள்ளைச்சாமி:"கைய குடுங்க சார், சேம் பிஞ்ச், எனக்கும் தெரியாது, கீச் கீச் மரக்கட்டை டோண்ட் டச் மீ, ஒரு மரத்த தொடுங்க சார், அவசரதுக்கு வேணும்னா ஒங்க மண்டைய தொடலாம் இல்லேன்னா உங்க வொய்ஃப் ஒரு கட்டை தானே தொட்டுக்கங்க"

குருநாதன்:"டேய் யாருடா நீ? பொறுக்கி"

வெள்ளைச்சாமி:"கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்புடி? அப்புறம் சார் சௌக்கியமா? வொய்ஃப் நல்லா இருக்காங்களா?"

குருநாதன்: "போலீஸ்ல புடிச்சி குடுப்பேன், பொறுக்கித் **ழி"

வெள்ளைச்சாமி:"சும்மா சொல்ல கூடாது இந்த 'ழ'கரம் நல்லா வருது சார் ஒங்களுக்கு, தமிழுக்கே அது தான் அழகு"

குருநாதன்:"ஃபோன வெக்க போறியா இல்லயா?"

வெள்ளைச்சாமி:"ஏன் சார் மெண்டல் மாதிரி கத்துறீங்க, ஒரு முத்தா குடுங்க வெக்கிறேன்"

குருநாதன்:"ச்ச ச்ச"ஃபோன கட் பண்ணிட்டாரு பாவம்.எல்லாரும் கொஞ்ச நேரம் கன்னாபின்னான்னு சிரிச்சோம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு பண்ணப்ப எங்கேஜ்டு டோன் கேட்டு, திருப்தியா "இனிமே காலைல தான் ஃபோன ஒழுங்கா வெப்பார் ,அடுத்து யாருன்னு பாப்போம் யாருப்பா அது பஜனை வாத்தியார் மூர்த்தி ? "

அவரோட பேர போட்டு குடுத்த பங்காளி "அவரு ரொம்ப சாதி வெறி உள்ளவரு மச்சி. RSS ல இருக்காரு, அதான் கொஞ்சமா கலாய்ச்சா நல்லா இருக்கும்"

வெள்ளைச்சாமி "எப்படி இவர தெரியும்?"ன்னு கேட்டதுக்கு போட்டு குடுத்த பங்காளி "என்னோட கணக்கு வாத்தியார்".

"அத்தச் சொல்லுங்க பங்காளி சும்மா சாதி அது இதுன்னு கதைய விடுற?கணக்கு வாத்தியார் மேல கடுப்பாகாம இருக்க முடியுமா?"

மறுபடியும் ஒரு ஃபோன் கால்.வேற குரல்ல பேசினான் வெள்ளை.மூர்த்தி: "ஹலோ " (செம்ம தூக்கத்துல இருந்திருப்பாருன்னு குரல்லயே தெரிஞ்சிச்சு)

வெள்ளைச்சாமி: "ஹலோ சார், இயேசு கிறிஸ்து மேல விசுவாசம் வெய்யுங்க சார்"

மூர்த்தி:"என்னது?"

வெள்ளைச்சாமி:"அவர் சகல பாவங்களையும் கழுவி உங்களை நல்வழி படுத்துவார் சார்"

மூர்த்தி:"உங்களுக்கு யார் இந்த நம்பர குடுத்தது?"

வெள்ளைச்சாமி:"சார், இயேசு கிறிஸ்து தான் சார் குடுத்தார்"

மூர்த்தி:"நான் யாரு தெரியுமா?"

வெள்ளைச்சாமி:"லைட்ட போடுங்க ஒரே இருட்டா இருக்கு ஒன்னும் தெரியல"

மூர்த்தி:"இப்போ ஒனக்கு என்ன வேனும்டா?"

வெள்ளைச்சாமி: "ஒரு உம்ம தெரிஞ்சாகனும், நீங்க "மேட்டர்"ல எக்ஸ்பர்ட்டா சார் ? அதான் உங்க ஏரியா முழுக்க உங்கள பஜனை வாத்தியார்ன்னு கூப்புடறாங்க"

(இதை எதிர்பார்க்காத நான் சத்தமா சிரிச்சிபுட்டேன். )

மூர்த்தி வாத்தியார் : நாசமா போய்டுவ

வெள்ளைச்சாமி: "விஷ் யூ த சேம் சார், குட் நைட், பஜனை கண்டின்யூ பன்னுங்க ஐ மீன் தூக்கத்த"ன்னு சொல்லி தானே வெச்சிட்டான்.

மறுபடியும் எல்லாரும் சேர்ந்து வெடி சிரிப்பு. இப்போ அருண் சீட்டு "பழைய ஃபிகரோட அம்மா"

வெள்ளை : "அப்பன் எங்க?"

அருண்: "துபாய்ல"ரெண்டாம் தாட்டி தான் அந்தம்மா வந்து எடுத்தாங்க

அந்தம்மா: ஹலோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

வெள்ளைச்சாமி(கொஞ்சம் அழும் குரலில்): அம்மா மனச கொஞ்சம் திட படுத்திக்கங்க

அந்தம்மா:ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ என்னது?

வெள்ளைச்சாமி: மதியம் ஒரு பதினோரு மணிக்கு...ஹு ஹு ஹு(அழுகை)

அந்தம்மா:ஐயோ என்ன??

வெள்ளைச்சாமி: தெகிரியமா கேளுங்கம்மா

அந்தம்மா:ஐயோ என்னாச்சு?

வெள்ளைச்சாமி:ஒரு மீட்டிங்குக்கு போன எடத்துல,

அந்தம்மா:ஐயோ.....

வெள்ளைச்சாமி:காந்திய சுட்டு கொன்னுட்டாம்மா கோட்ஸே

அந்தம்மா: ஐயோ... யாருன்னு சொன்னீங்க?

வெள்ளைச்சாமி சைகை காட்ட ரூமில் இருந்த அனைவரும் சேர்ந்து ஒருமிச்சு அழுதோம்.

அப்பவே ஃபோன கட் செஞ்சிட்டான் வெள்ளைச்சாமி."ஆச்சு, இப்போ ஒரு ஃபாலோ அப் கால் அப்புறம் VIP கால் பாக்கி இருக்கு" ன்னு அலுத்துகிட்டான் வெள்ளை.அருண் டீட்டெயில் சொன்னான்,"நேத்து ஒருதன் கிட்ட ஃபோன் பண்ணி 5 கிலோ உளுந்து அப்பளமும், 700 அரிசி அப்பளமும் ஆர்டர் பண்ணியிருந்தான் வெள்ளை , அந்த ஆளுக்கு தான் ஃபாலோ அப் கால்,VIP கால்ங்குறது பிரபலமானவங்களுக்கு பண்ணுற கால், அத வெள்ளை தான் சஸ்பெண்ஸா செய்வான், வெய்ட் அண்ட் ஸீ".

அடுத்த கால்ல வெத்தலை பாக்கு வாயில போட்டவன் மாதிரி பேசினான் வெள்ளைச்சாமி.

வெள்ளைச்சாமி: "என்ன மிஷ்டழ் ழமேஷ் " (மிஸ்டர் ரமேஷ்)

ரமேஷ்: எஸ் ஸ்பீகிங்க்

வெள்ளைச்சாமி:"நீங்க ரொம்ப நன்னா ஷ்பீக் பண்றேள் ஆனா வொர்க் செரியா இல்லயே"

ரமேஷ்: யார் சார் நீங்க?

வெள்ளைச்சாமி:"புரொஃபஷர் TK பேஷறேன், நேதிக்கி பொண்ணு ஷீமந்தம்னு அப்பளம் ஆர்டர் பண்ணேன் , நன்னா மூஞ்சில கரிய பூஷிட்டேள் சார்"

ரமேஷ்: ஓ சாரி சார்.... நீங்க குடுத்த அட்ரஸ் கண்டுபுடிக்க முடியல...ரொம்ப சாரி சார்

வெள்ளைச்சாமி:" ஷாரி , முடியலன்னு ஈஷியா ஷொல்லிட்டேள், ஆனா ஷீமந்தம் கேன்ஷல் பண்ணிட்டாளே மாப்ளையாத்து பேழ்."

ரமேஷ்: "அப்பளாத்துக்காக. போய்..."

வெள்ளைச்சாமி:"பண்ணிட்டாளே. சரி பாஷ்ட் இஷ் பாஷ்ட், நாளைக்கு வெச்சிழுக்கேன், கொண்டு வந்துடுங்கோ சாழ் ப்லீஷ்"

ரமேஷ்:சார் அட்ரஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ.

வெள்ளைச்சாமி: ஷொல்றேன் , அதுக்கு முன்னாடி மிஷ்டழ் ழமேஷ், ஒரு சின்ன ஃபேவர், வரும் போது கொஞ்சம் ஷ்ரமம் பாக்காம எல்லா அப்பளத்தையும் பொரிச்சி எடுத்துண்டு வந்துடுங்கோஓஓஓஓஓஓ

ரமேஷ்: டேய் யாருடா நீ கைல கெடச்ச வக்கா"

வெள்ளைச்சாமி: "கைல கெடைக்க நான் ஒண்ணும் கொசு இல்லடா...பர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஃபோன் கட்!

"இன்றைய யாருன்னு நான் பேசும்போது உங்களுக்கே தெரியும்"

ஃபோன் எடுக்கபட்டதும் ஒரு அப்பாவி இலைஞன் குரலில்

வெள்ளைச்சாமி: பெரிய ஐயா இருக்காருங்களா?

எதிர் முனை: இருக்காருங்க தூங்குறாரு

வெள்ளைச்சாமி: நான் லன்டன்லேந்து பேசறேங்க இங்க பகல்,கண்டிப்பா அவர் கிட்ட பேசனும்.

பெரிய ஐயா கிட்ட ஃபோன் போச்சு, இப்பவும் எனக்கு சஸ்பெண்ஸ் தான்.

ஐயா: யாருப்பா அது?

வெள்ளைச்சாமி:" ஐயா, தாத்தா .. அப்பா என்ன திட்டுங்கப்பா என்ன அடிங்க" (ஒரே அளுவாச்சி)

ஐயா: அளுகாதப்பா நான் இருக்கேன்பா தாத்தா இருக்கேன்பா உனக்கு என்ன ப்ரெச்சனை?

வெள்ளைச்சாமி(தேம்பிகிட்டே):ஐயா..எனக்கு 19 வயசு ஆகுதுங்க, லன்டன்ல 3 வருசமா ரூம் மேட்ஸோட சேர்ந்து..ஹூம்..ஹூம்..தொடர்ந்து மூனு வருசம் தப்பு பண்ணா கோடி ரூபாய் குடுத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொன்னீங்களே

ஐயா: "ஐயோ அத வேண்டாம்னு எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன் தமிழ்நாட்டு இலைஞர்கள் கிட்ட ஒண்ணும் கவலப் பட வேண்டாம் இந்தியா வந்ததும் என்ன பாரு, ஆனா 25 வயதுக்குள்ளாற இருக்கிறதுனால் ஒண்ணும் பயப்பட வேண்டாம் "

வெள்ளைச்சாமி: அப்போ எனக்கு ஒண்ணும் ப்ரச்சனை இல்லையே?

ஐயா: இல்ல டா கண்ணு

வெள்ளைச்சாமி: அப்டீன்னா நான் இன்னும் ஒரு ஆறு வருசதுக்கு...

ஐயா:6 வருசத்துக்கு?

வெள்ளைச்சாமி: அடிச்சிகட்டூங்களா?

மௌனமா ஃபோன வெச்சிட்டாரு ஐயா!!அடுத்த நாள் கெளம்பும்போது வெள்ளை "டச்ல இருங்க பாஸ், உங்ககிட்ட லேண்ட்லைன் இருக்கான்னு" கேட்டான். நான குடுப்பேன்??

அப்புறம் நொய்டால கால் சென்டர்ல இருந்தான் இப்போ டச்ல இல்லை !

36 comments:

Arun said...

laughed out loud reading this inviting stares from collegues.... am sure even now yuvraj and Xavier will laugh if they come across this...

vaijayanthi said...

யதார்த்தமான நிகழ்வுகளை அருமையாக வெளிபடுத்தியதற்கு பாராட்டுக்கள்.ஆனால் கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.

kashyapan said...

பாக்கியம் ராமசாமி(ஜ.ரா.சுந்தரேசன்) ஒருவர் தான் குபீரென்று சிரிக்கவைப்பார். என் வயதான மனைவிக்கு பாதி ராத்திரியில் தூக்கம் கலைய என்ன சிரிப்பு என்று சண்டைக்கு வந்துவிட்டார்.திருமணம் ஆகி அடுத்த ஆண்டு ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடா ஆசை. அதைக் கெடுத்துவிடாதீர். வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

Ravisankaranand said...

உண்மையாகவே நடந்ததா அல்லது கற்பனையா? எதுவாக இருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை இந்த பதிவில்.

வெள்ளை சாமி எங்கள் மனதில் ஒரு இடம் பிடித்து விட்டார்

பாரதசாரி said...

நன்றி காஸ்யபன் ஐயா,
ஐம்பதாம் ஆண்டு நிறைவிற்கு அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்,
எனக்கு முதலாம் ஆண்டே சிக்கல் தான் போல இருக்கு,
கீழ் கண்ட பின்னூட்டம் கொடுத்தது என் மனைவி ;)
//
vaijayanthi said...
யதார்த்தமான நிகழ்வுகளை அருமையாக வெளிபடுத்தியதற்கு பாராட்டுக்கள்.ஆனால் கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.

//

பாரதசாரி said...

நன்றி அருண் , ரவி

டுபாக்கூர்கந்தசாமி said...

//
ஐயா:6 வருசத்துக்கு?

வெள்ளைச்சாமி: அடிச்சிகட்டூங்களா?

மௌனமா ஃபோன வெச்சிட்டாரு ஐயா!! //

ஹாஹாஹா தல மெய்யாலும் அந்த ஆளுக்குமா கால் பண்ணீங்க.

அருமையான விவரனை இருந்தாலும் கொஞ்சம் ஓஓஓஓஓஓஓஓஓஓவர் தான் போங்க...

சரி உண்மைய சொல்லுங்க நீங்க எத்தண பிரேங்க் கால் போட்ருகீங்க, ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேசன் எங்க வீட்ல லேண்ட் லைன் இல்ல ஹிஹி....

பாரதசாரி said...

Hi டுபாக்கூர்கந்தசாமி:
இப்போ காலம் மாறி போச்சு, காலர் ஐடீ வந்தப்புறம், வெள்ளைச்சாமி திருந்தியிருப்பான்னு நெனைக்கிறேன் ;-)

நாரத முனி said...

அந்த வி ஐ பி பழனி காரரா அல்லது சேலத்து காரரா?

Anonymous said...

Got this link from your cousin... This one is really good.. I enjoyed it.. very hilarious

Regards,
Raj

பாரதசாரி said...

Thanks Raj!

Pradeep said...

Mapla,,

Chance illa mapla...supero super....

nee sonnathu....nera ketta maathiri oru efffectuuu... :))

பாரதசாரி said...

ப்ரதீப் மாப்ளை ரொம்ப நன்றி:)

Pradeep said...

mapla aniyaayathuku fasttaa irukka... :)

பாரதசாரி said...

கூடவே பிறந்தது ஸ்பீடு ;)

Pradeep said...

ohoh....neenga twinsaaa :))

பாரதசாரி said...

நக்குலா?? நெக்ஸ்ட் ஸ்டோரி ஹீரோ நீ தான் ;-)

Pradeep said...

Mapla....sorry....ennaya viturunga....etho chinna payyan....theriyaama pesiten :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொக்கா மக்கா...கலக்கியிருக்கய்யா....! (பதிவெழுதுறேன்னு இப்பிடியெல்லாம் ரெண்டு கொயர் நோட்டுக்கு எழுதப்படாது, கொஞ்சம் சுருக்கமா எழுதுமா ராஜா!)

TERROR-PANDIYAN(VAS) said...

பின்றிங்க தல....

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//ங்கொக்கா மக்கா...கலக்கியிருக்கய்யா....! (பதிவெழுதுறேன்னு இப்பிடியெல்லாம் ரெண்டு கொயர் நோட்டுக்கு எழுதப்படாது, கொஞ்சம் சுருக்கமா எழுதுமா ராஜா!)//

அட விடுமா பன்னிகுட்டி!! பெருசா இருந்தாலும் நல்லாதன இருக்கு...(என்ன கமெண்ட் மாட்ரேஷன்தான் பிடிக்கல)

பாரதசாரி said...

// TERROR-PANDIYAN(VAS) said...
பின்றிங்க தல.... //
ரொம்ப நன்றி தல ;-)

பாரதசாரி said...

தல கமெண்ட்ஸ் மாடரேஷன் எடுத்துட்டேன் தல...

Pras said...

Jay,

Kalakkal

பாரதசாரி said...

Thanks Pras

வெண் புரவி said...

சூப்பர்..... நல்லா இருக்கு....

rajesh said...

ஜெய்..
இயல்பான நகைச்சுவை.
தொடர்ந்து எழுதுங்கள்..

பாரதசாரி said...

ரொம்ப நன்றி ராஜேஷ் ;-)

JK said...

""ஒரு உம்ம தெரிஞ்சாகனும், நீங்க "மேட்டர்"ல எக்ஸ்பர்ட்டா சார் ? அதான் உங்க ஏரியா முழுக்க உங்கள பஜனை வாத்தியார்ன்னு கூப்புடறாங்க""-
"ரு மரத்த தொடுங்க சார், அவசரதுக்கு வேணும்னா ஒங்க மண்டைய தொடலாம் இல்லேன்னா உங்க வொய்ஃப் ஒரு கட்டை தானே தொட்டுக்கங்க""
hayyo hayoo..விழுந்து விழுந்து சிரிச்சேன்
Lovely narration..it was as if I were there in the room groggy and half awake watching the comedy galatta..

பாரதசாரி said...

Thanks JK :-)

Anonymous said...

I have gone back to my good old college days.I simply luaghed.........we were very naughty boys,and i was the leader of the gang, vellaichami was me!!!!

பாரதசாரி said...

Many Thanks Rajasekarn :-) I am sure you are not doing this after the caller id invention and implementation LOL:-)

வால்பையன் said...

அவர் நம்பர் கொடுங்க தல! :)

பாரதசாரி said...

வால்பையன் :)

Ezhil Ra said...

Simply Awesome :)

பாரதசாரி said...

Thanks Ezhil :)

Post a Comment