Monday, July 22, 2013

பண்புடன் அந்தர் அங்கம்



அன்புள்ள அம்மா,நான் 21 வயது நிரம்பிய அழகான இளம் பெண்.தற்கொலைக்கு முன் உங்களிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று நினைத்து தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
நான் இனியும் உயிர் வாழ்வது அவசியமா என்று சொல்லுங்கள்.
எனக்கு பதினான்கு வயதாகும்போது , என் அக்காவிற்கு திருமணமானது.அக்காவின்
கணவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார் ,(பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)(திருமணத்தின்போது அவர் தம்பிக்கு பத்து வயது, இப்பொழுது பதினேழு) . ஆரம்பத்தில் அக்கா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் மாமா அதிகம் பேச மாட்டார். என் இடுப்பை கிள்ளியபடி "ந‌ல்லா படிக்கிறியா"ன்னு மட்டும் கேட்பார்.
எங்க அக்கா தலை பிரசவத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தபோது, மாமா வாரம்
ஒரு முறை வருவார்.அப்படி வருகையில் ஒரு முறை என்னிடம் "தேவி வா நம்ம
சுவாமி மலை கோவிலுக்கு போய்விட்டு, முருகனை தரிசனம் செய்துட்டு வரலாம்"னு
அழைச்சார். எங்க‌ள் வீட்டு பெரியவங்களும் மாப்ளையாயிற்றே என்று அனுப்பி வைத்தார்கள்.
"ந‌டந்து போனால் ரொம்ப கஷ்டம் வா உன்னோட சைக்கிள்ல போகலாம்"னு சொன்னார்.
நானும் என் லேடி பர்ட் சைக்கிளை தள்ளிகிட்டே தெருமுனைக்கு போனதும் "வா
தேவி, டபிள்ஸ் போகலாம்"னார்.நான் கேரியர்ல உட்கார்ந்து போகும்போது
"கஷ்டமா இருந்தா என்னைய கட்டி புடிச்சுக்க"ன்னார். சும்மா விளையாடுகிறார்
என்று நினைப்பதற்குள் என் கையை அவரே தன் மீது போட்டுக் கொண்டார்.
சட்டென நான் கையை விலக்கி கொள்ளவே "இங்க பாரு தேவி, நீ மனசு வெச்சா இதே
சைக்கிள்ல, கேரியர்ல உங்க அக்கா லதாவையும், முன்னாடி உன்னையும் வெச்சி
டிரிப்பிள்ஸ் அடிக்க நான் தயாரா இருக்கேன்" என்று என் இதயத்தில் குண்டை
தூக்கிப் போட்டார்."உங்க பாப்பாவ என்ன செய்ய?" என்று கண்ணீரை அடக்கியபடி
கேட்டதற்கு, அதுக்கு ஒரு பேபி ஸீட் வாங்கிக்கலாம் என்று சொன்னார்.

அவர் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் , நான் எல்லோரிடமும் உண்மையை சொல்லலாம் என்றெண்ணிய போது நான் அவர் மூலம் கருவுற்றேன்.ஆண் குழந்தையாக இருந்தால் "சூர்யா" என்றும் , பெண்ணாக இருந்தால் "ஷாலினி" என்றும் நான் துக்கத்தோடு எண்ணிய போதே மாமா , அதெல்லாம் முடியாது , பெண்ணாக இருந்தால் பிரியங்கா என்றும் ஆண் குழந்தையாக இருக்கும் பட்ச‌த்தில் "சோப்ரா" என்றும் வைக்கவேண்டும் என்று அவர் (மீண்டும் ஒரு முறை) ஒற்றைக்காலில் நின்றார். "மாமா தயவு செய்து வேண்டாம் " என்று நான் கெஞ்சியும் அவர் மனம் இறங்காததால் அந்த கருவை கலைக்க நேரிட்டது.

பாப்பாவின்((அக்காவின்)) காது குத்து வரை தொடர்ந்த இந்த வருத்தம் என்னை மிகவும் வாட்டவே ,அவர்கள் வீட்டில் நடந்த காது குத்துக்கு சேலம் சென்ற போது, அவரது தம்பிய ஜீவாவிடம் , என் சோக கதையை சொன்னேன்.அதற்கு அவர் தம்பி ஜீவா "கவலைப் படாதே தேவி , உனக்கு "சூர்யா", "ஷாலினி" என்ன, "கார்த்திக்" , "ஷாமிலி"க்கு கூடா நான் உத்தரவாதம்" என்று சத்தியம் செய்ததை நம்பி நான் அவனுடன் மீண்டும் சேலத்திலேயே, சுவாமி மலைக்கு போனேன். தரிசனமும் , பிரசாதமும் கிட்டியது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் "சொன்னா புரிஞ்சிக்க,இப்போ போய் இப்படி பேர் வெச்ச எங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க,அவங்க எஸ்.ஜே.சூர்யான்னு (சேலம் ஜீவாவின் மகன் என்று )தப்பா நெனைப்பாங்க" என்றான்.

பெற்றவர்களிடம் சொல்லமுடியாமல் , கூடப் பிறந்த சகோதரிக்கு துரோகம் செய்த குற்ற உணர்வில், அவளது மாமனாரிடம் மன்றாட முடிவு செய்தேன்.

"பேர் எல்லாம் அப்புறம் வெச்சிக்கலாம், முதல்ல தேவி, யம்மா சரோஜா (தேவி - (முன்னரே சொன்னது போல் ,பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)) சாமன் நிக்காலோ" என்று என்னை மறுபடியும் சுவாமி மலைக்கு அழைக்கப் பார்த்தார்.

அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்து வாதிட்டேன், அதற்கு மாமா " நானாவது லேடிஸ் சைக்கிள்ல ட்ரிபிள்ஸ் அடிக்குறேன்னு சொன்னேன், நீ ட்ரை சைக்கிள்ல ஃபுட் போர்டே அடிக்குறியே" என்று ஏளனப் படுத்தினார்.

பெற இருக்கும் என் குழந்தைக்கு எனக்கு பிடித்த பெயர் வைக்கக் கூட உரிமை இல்லையா? என்று கண்ணீர் விட்டு அழுதேன்,கணக்கு வாத்தியார் சுந்தரத்தின் மகள் தேவி இப்படி சோரம் போய்விட்டாள் என்று ஊர் முழுக்க ஏசுவார்கள் என்று பயந்து தற்கொலை கூட செய்துகொள்ள மனம் துடிக்கிறது.. அல்லது நீங்களே எங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பேர் வெய்யுங்க அம்மா.

பெயர் ஊர் வெளியிட விரும்பாத உங்கள் அன்பு மகள்.



---------------------------------------

அடி பெண்ணே பொன் ஊஞ்சல் ஆடும் இளமை ,வண்ணங்கள் தோன்றும் இயற்கை ;உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் ;கொண்டாடுதே சுகம் கோடி என்றதே;ப‌ண் பாடுதே ம‌னம் ஆடுகின்றதே ;அடிப் பெண்ணே,

அடி பைத்தியக்கார பெண்ணே.பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண் வர்க்கம்.. எனத் துவங்கி நான் எத்தனை பதில்கள் போட்டாலும் திருந்தாது இந்த ஆணாதிக்க சமூகம்.என் பதிலை நீ நிஜமாகவே எதிர்பார்க்கிறாய் என்பதை என்னாலே நம்ப முடியவில்லை.இந்தப் பகுதியைப் படிக்கும் பலர் , கில்மா மேட்டரை மட்டும் பாத்ரூமில் படித்து, என் பதிலை புறக்கணிக்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் மனம் உடையாதே.அடிக்கடி இதே போல் கடிதம் எழுது.உன் கடித அளவில் பகுதியளவேனும் என் பதில் இல்லையென்றால் எனக்கு அடுத்த வார சன்மானம் கூட கிடைக்காமல் போய் விடும் பெண்ணே, என் அன்பு மகளே.ஆகவே முல்லும் மலரும் பாட்டை வைத்து சற்று பத்தியின் நீளத்தை ஒப்பேற்றியுள்ளேன்.இந்த தாயை மன்னிப்பாயா?மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக் கொள். நீ உன் சமூகத்தில் ஒரு முன் உதாரணமாக இருந்து உனக்கு தெரிந்தவர் எல்லோரையும் இப்படி குஜாலாக கடிதம் எழுத ஊக்குவிக்கனுமடி கண்ணே.அம்மாக்கு சன்மானம் வேணுமா இல்லையா?பெண்ணுக்கு தன்மானமும், இந்த அபலை அம்மாவுக்கு சன்மானமும் எவ்வளவு முக்கியம் என்பது உனக்கே தெரியும், உன்னைப் போன்ற புத்திசாலிக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லயே.வாய்க்காலையும், வயல் காட்டையும் படைத்தாள் உனக்கென கிராம தேவதை என்று தொடர்ந்து இந்த உலகத்தைப் பாரடியம்மா.தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்த இளைஞர்களை, திசை திருப்பி, சீரழித்த சேலம் சித்தர் வழி சிலரும் இதற்கு காரணம்.ஆனால் அவர்களிடம் முறையிடுவது வீண், தம்புடி தேறாது மகளே.

உன் பிரச்சனை தான் என் பிரச்சனையும், இந்த சமூகத்தின் பிரச்சனையும், ஒட்டு மொத்த பெண் வர்க்கத்தின் பிரச்சனையும்.எனக்கு தீர்வு கிடைத்தால் உனக்கும் கிடைக்கும், ஏன் இந்த சமூகத்திற்கே கிடைக்கும்.பெயர் ஊர் வெளியிடாத சுவாமிமலை தேவி, எனக்கு இந்த சூழலுக்கான சரியான விடை கிடைக்கும்போது நானே உன்னை தொடர்பு கொள்கிறேன். அதுவரை போராடு. வீதிக்கு சென்று போராட வேண்டிய அவசியம் இல்லை. இதைப் போல் எனக்கு கடிதம் எழுதினாலே போதும்.இதை போல் நீண்ட கடிதம் வந்தாலே எனக்கு என்னையும் அறியாமல், ஆற்றாமைப் பொங்கி வழியும்.இதை விட நீலமாக பதில் எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறேனே? என்ன செய்ய ?பெண்ணுக்கு பெண்ணே விரோதியாக இருக்கும் நிலை தான் இன்று நிலவுகிறது.

"அன்பும் அரணும் உடைத்தாயின்" என்று ஒரு அன்பு மனம் கொண்ட , மனம் உடைந்த தாயின் சிறப்பை வள்ளுவர் சொன்னது போல், நானும் உனக்கு தாய் தானே?மற்றவரிடம் , பாசமும் , நேசமும், பரஸ்பரம் அன்பும் இருந்தால் தானே வாழ்க்கை முற்று பெறும்? அந்த விஷயத்தில் நீ நல்ல அதிர்ஷ்டசாலியம்மா , உனக்கு சற்று அதிகமாகவே கிடைத்திருக்கிறது.


நிதானம் தவறாதே அன்பு மகளே, அவசரப்பட்டு , ஜீ த‌மிழுக்கு போகாதே, பொறுமை தானே பெண்ணின் சிறப்பு.மேலும் அதையும் மீறி நீ ஜீ த‌மிழுக்கு போவதாக இருந்தால், ஒரு மாதம் பொறுத்திரு, அங்கு நிகழ்ச்சி நடத்தும் அம்மையார் கூடிய விரைவில் வெளியேற உன் கண்ணீர் கதையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். அந்த பெண்மணி விடைபெற்றதும் என்னை அங்கு அழைக்கிறார்கள்.பேரம் படியும் வரை சற்று பொறுமை கொள் பெண்ணே. எனது முதல் போணி நீயாக இரு, அக்கிரமம் நடந்தால் தீயாக இரு.
கண்ணீரை துடைத்து விட்டு உன் அக்காவின் மாமனார் சொன்னது போல் தைரியமாக 'சாமான் நிக்காலோ' அதாவது புத்தியை உபயோகித்து செயல்படு. எவ்வளவோ செய்துவிட்டாயடி பெண்ணே.நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!சுவாமி மலை முருகன் உன்னை கை விட மாட்டார்.

6 comments:

Dowsarpandi said...

கொஞ்சம் ஹெவியா வாரமலர் இன்ப்லூவன்ஸ் தெரியுது.... முடிஞ்சா இந்த காம(நெ)டிய எங்கிட்டாவது சேத்துக்கலாம்...
http://www.youtube.com/watch?v=yEipHz2IlSo

பாரதசாரி said...

Dear Dowsarpandi :கண்டமனூர் ஜமீன் கண்டம் செஞ்ச காமெடிக்கே அ.அ தான் இன்ஸ்பிரேஷ‌னாம் :) வருகைக்கும் பதிவிற்கும் நன்றி :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹ்ஹஹா.......... செம குத்தா இருக்கே?

பாரதசாரி said...

பன்னிக்குட்டி ராம்சாமி : :)

காது குத்த தானே சொல்றீங்க? :) எல்லாம் வல்ல சேலம் சித்தரின் திருவருள் தான் :)

Tamil News 24x7 said...

செம குத்தா இருக்கே? //
காது குத்த தானே//

ஓ.கே. ஓ.கே.!

வால்பையன் said...

ஆமா, சுவாமி மலை முருகன் கைவிட மாட்டார், நிச்சயம் அடுத்து ஒரு ஷேர் ஆட்டோ அனுப்புவார்!

Post a Comment